வவுனியா மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய ஐந்து வீடுகள் பயனாளிகளின் உரிமைக்காக ஒப்படைக்கப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய ஐந்து வீடுகள் பயனாளிகளின் உரிமைக்காக ஒப்படைக்கப்படுகின்றன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்படும் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ வீட்டு உதவி திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.அதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியை உதவியாக வழங்கியதுடன், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்கள் கலந்து கொண்டார். மேலும், பிராந்திய அரசியல் பிரதிநிதிகள், கிராம சேவையாளர், அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
No Comments