சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் முதல் கட்டம் இன்று வழங்கப்பட்டது.
சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் முதல் கட்டம் இன்று வழங்கப்பட்டது.
இலங்கை சமூகத்திற்கு “வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை” வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும். குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் அந்த இலக்குகளை அடைவதில் ஒரு முக்கிய அங்கமாகும். இதற்காக, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் 2026 ஆம் ஆண்டில் பல வேலைத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சகல திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 31,218 ஆகும்.
மிக முக்கியமான திட்டமான “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” வீட்டு உதவித் திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், நாட்டின் 14,016 கிராம அலுவலர் பிரிவுகளில் ஒவ்வொன்றும் உள்ளடங்களாக உள்ள ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு சேரிக் குடிசைகள் அல்லது தற்காலிக வீடுகளில் வசிக்கும் சமூகத்திற்கு ஒரு புதிய வீட்டைக் கட்ட உதவி வழங்கப்படும். இந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை 1,787 ஆகும்.
இவற்றில், 9,700 வீடுகள் 2026 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 9,700 மில்லியன் ஆகும். பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் அடங்கிய குழுவால் அடையாளம் காணப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1 மில்லியன் ரூபா உதவி வழங்கும். இதற்கு மேலதிகமாக, மாவட்ட அலுவலகங்களில் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகளின் பங்களிப்புடன் வீட்டு அபிவிருத்திக்காக தேவையான வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. சமூக பங்களிப்பு திட்டமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு வீட்டிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியினை வழங்குவதே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப வைபவம் காலியில் உள்ள “ஹால் தி கோல்" மண்டபத்தில் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது, காலி மாவட்டத்தில் 250 பயனாளிகளுக்கு காசோலைகள் விநியோகிக்கப்பட்டன. திட்டத்தின் முதல் கட்ட பயனாளிகளுக்கு காசோலைகளை விநியோகிக்கும் நாடளாவிய திட்டம் இன்று (25) 13 மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். அதன்படி, ரூ. 1,500 பயனாளி குடும்பங்களுக்கு 1,500 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். அந்த மாவட்டங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர்களால் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒழுங்குசெய்யப்படும். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் அமைப்பின் பங்களிப்புடன்;; செயற்படுத்தப்படும்.
இந்த கட்டத்தின் கீழ், மொனராகலை, களுத்துறை மற்றும் பொலொன்னறுவ மாவட்டங்களில் தலா 100 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 170 வீடுகளும், மாத்தறை மாவட்டத்தில் 112 வீடுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 105 வீடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 வீடுகளும் நிர்மாணிக்கப்படும்;.
அம்பாறை மாவட்டத்திற்கு 110 வீடுகளும், புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களுக்கு தலா 125 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 110 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக குருநாகல் மாவட்டத்தில் 307 காசோலைகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. இன்று, இந்த 1174 பயனாளிகளுக்கு காசோலைகள் விநியோகிக்கப்படுகின்றன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் மார்ச் 24 திகதி ஏனைய மாவட்டங்களுக்கு முதல் கட்ட காசோலைகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேசிய வீட்டுவசதி திட்டம் 2026 க்கு இணங்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செவண நிதியத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுமார் 3500 வீடுகளை கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்திய உதவி பெறும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த ஆண்டில் 16,000 வீடுகளின் நிர்மாணங்களை பூரணப்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.
No Comments